நயன்தாரா பரந்த மனசு… யோகிபாபு திறந்த மனசு… கோலமாவு கோகிலா கலகலப்பு
நயன்தாரா சமீபத்திய படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆகஸ்ட் 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோலமாவு கோகிலா.
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா?
பெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?' என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கூட குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன், ஆகஸ்ட் 17ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாகும் கோ...









