K7 ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை”
வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே, மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையை ஒரு அதிர்ச்சியான சம்பவம் தலைகீழாக மாற்றிப் போடுகிறது.
அந்த சம்பவத்திற்கும், முதியவர்களுக்கும் என்ன தொடர்பு? அந்த சம்பவம் யாரால் நிகழ்த்தப்படுகிறது?, அவர்களை இந்த முதியவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடனும், முடிச்சுகள் நிறைந்த திரைக்கதையுடனும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவி.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் அனுப் ஆகியோர் நடித்திருப்பது இப்படத்தின் முக்கியமான அம்சம்.
இவர்களுடன் ரோஹித் என்னும் புதுமுக நாயகனும், ...









