குபேரா விமர்சனம் 3/5
குபேரா விமர்சனம் 3/5
நம்ப நாட்டு கடல் பகுதியில் ஏராளமான அளவில் கச்சா எண்ணை இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கிறார்கள். அதை அரசுக்கு சொல்லாமல் மறைத்து ஒரு மந்திரியுடன் டீல் பேசுகிறார் வில்லன். மந்திரியும் அதற்கு லஞ்சமாக ஒரு லட்சம் கோடி கேட்கிறார்.
அந்த ஒரு லட்சம் கோடியை சரியாக பிரித்து தர சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை நாடுகிறார் வில்லன்.
நேர்மையாக இருந்த்தால் பொய் வழக்கில் சிறையில் இருக்கும் நாகர்ஜுனா இந்த டீலை ஏற்றுக் கொண்டு சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
லஞ்சப்பணத்தை பினாமிகள் பெயரில் மாற்ற அடையாளம் இல்லாத, அடிப்படை அறிவு கூட இல்லாத பிச்சைக்காரர்கள் வேண்டும் என்கிறார். அதன்படி நான்கு பிச்சைக்காரர்களைக் கொண்டு வருகிறது வில்லன் டீம். அந்த நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவர் தனுஷ். அடிப்படை அறிவு கூட இல்...









