புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

தப்பித்த ”கள்ளன்” விரைவில் தியேட்டரில் பார்க்கலாம்!

தப்பித்த ”கள்ளன்” விரைவில் தியேட்டரில் பார்க்கலாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கள்ளன்' டைட்டில் விவகாரம்… தள்ளுபடி செய்தது நீதிமன்றம்! பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.இந்த நிலையில் குறிப்பிட்ட ஜாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு ஊர்களிலிருந்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு பெண் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.அதில், ' கள்ளன்' படத்திற்கு சென்ஸார் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கி...
அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா ஆடியிருக்கும் டான்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங...
எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று(18.02.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் சரியாக 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு!

ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையிலுள்ள காமாட்டி புரத்தில் வாழ்ந்த பெண் தாதா கங்குமாய் பற்றிய கதை. காதலனால் கைவிடப்பட்ட பெண், ஒரு தாதாவின் தன் தங்கையாக பாலியல் தொழில் செய்யும் பகுதியில் வாழ்கிறார். பின்னாளில் அவரே அண்ணன் தாதாவின் இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறார், இதுவே கதை. ஆனால் படத்தில் கங்குமாய் விபச்சாரம் செய்வது போலக் காட்டியிருப்பதாகக் கூறி கங்குமாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது இந்தப் பட...
விலங்கு ரசிகர்களை ஏமாற்றாது இனி புது விமலை பார்க்கலாம்

விலங்கு ரசிகர்களை ஏமாற்றாது இனி புது விமலை பார்க்கலாம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விலங்கு ரசிகர்களை ஏமாற்றாது இனி புது விமலை பார்க்கலாம்   https://youtu.be/jdsYvgZENIs
ராம் சரண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷங்கர் படக்குழு!

ராம் சரண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷங்கர் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண். இவர் நடிப்பில் வெளியான மகதீரா, யவடு, துருவா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில், "ராம்சரண் 15' படத்தின் படப்பிடிப்பு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்...
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2003-இல் வெளியான ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்திம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகர் சிபி சத்யராஜ். அதன்பின் அவருடைய தந்தை சத்யராஜுடன் சேர்ந்து மன்னின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜேக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா போன்ற பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கபடதாரி படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.   அதன்பின் அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரின் 20-வது  படமாக இது உருவாகிவருகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இச...
விலங்கு இணைய தொடர் ரசிகர்களை ஏமாற்றாது என்கிறார் விமல்!

விலங்கு இணைய தொடர் ரசிகர்களை ஏமாற்றாது என்கிறார் விமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கலகலப்பு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’  போன்ற பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் ’விலங்கு’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இதில் விமலுடன் இணைந்து இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 18-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர் விமல் பேசியது, ”இந்தக் கதை முதலில் படமா...
கருணாஸ் நடிப்பில் இறுதிகட்ட பணிகளில்  ‘ஆதார்’

கருணாஸ் நடிப்பில் இறுதிகட்ட பணிகளில் ‘ஆதார்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்பட...
சாதி அடையாளங்களை முன்னிறுத்தி படம் எடுக்கிறார்கள் – இயக்குனர் அமீர் காட்டம்!

சாதி அடையாளங்களை முன்னிறுத்தி படம் எடுக்கிறார்கள் – இயக்குனர் அமீர் காட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அமீர் பேசியாதவது, இந்த காலத்தில் ப...