காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5
காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5
தனித்துவம், வேலை, சாதனை என ஆணும் பெண்ணும் ஓடிகொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் பெண்ணோடு காதல் இருக்கலாம் ஆனால் கல்யாணம், குழந்தை எல்லாம் அவசியமில்லை என வாழுகிற ஒருவனை நிச்சயதார்த்தம்வரை கொண்டு வந்த ஒரு பெண் திடீரென அவனை ஏமாற்றி ஓட்டம் பிடித்தால் அந்த ஆண் என்ன செய்வான் என்பதை ஒரு லைனாகவும், உருகி உருகி காதலித்தவன் கிடைத்த கேப்பில் வேறு பெண்ணுடன் உல்லாசமாய் இருப்பதை பார்த்த ஒரு பெண்ணும் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை இன்னொரு லைனாகவும் எடுத்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இதில் பரபரப்புக்காக ஆண் துணை இல்லாமல் அறிவியல் வளர்ச்சியால் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் கதா நாயகி என ஒரு கதையையும், அதற்கு முன்பாக நண்பனுக்காக உயிரணு சேமிப்பு வங்கியில் தன் உயிரணுவையும் சேமிக்...









