வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

MOVIES

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய அருண்பாண்டியன்..!

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய அருண்பாண்டியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும்  சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ".அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் 'விஸ்வாஸம்' படத்தை வெளியிடுவதில...
23 நாளில் படமான என் காதலி சீன் போடுறா…

23 நாளில் படமான என் காதலி சீன் போடுறா…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “என்  காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க,நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா,அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர்,தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்நடித்துள்ளார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராம்சேவா.  இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது... ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்த...
ழகரம் சினிமா ஆகும் பிரபல நாவல்..!

ழகரம் சினிமா ஆகும் பிரபல நாவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பல விருதுகளைப் பெற்ற நாவல் 'ப்ராஜெக்ட் ஃ' படமாகிறது !*மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும் ,47 நாட்கள் ,மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி ,அரவான், விசாரணை போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப்படமாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன. நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக  அடுத்து உருவாகியுள்ள படம் 'ழகரம்.'  பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில் ,நந்தா நடிப்பில் , தரன் இசையில் , அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த 'ழகரம்' திரைப்படம் .பல விருதுகளைப் பெற்ற ' ப்ராஜெக்ட் ஃ' நாவலின்  தழுவல் இது. இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண...
மாரி 2 விமர்சனம்

மாரி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
மாரி 2 விமர்சனம் பில்டப் எல்லாம் ஓகேதான்… நீ பன்ன பில்டப்புக்கு இந்த கதையை டப்பாவுல கூட அடைக்க முடியாதேப்பா என்பதை போல இருக்கிறது தனுஷின் மாரி2. ரவுடியா நடிக்கிறதுன்னா தனுஷூக்கு ரொம்ப புடிக்கும்போல அதுவும் வகை தொகையே இல்லாம இஷ்டம்போல டயலாக் பேசி என்ன சொல்ல வர்றோம்னே தெரியாம ஒரு படத்துல நடிச்சிட்டு அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் மாரின்னு சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல… அதுக்கு தனுஷை பாராட்டலாம். இந்த மாரி2 வர்றதுக்கு முன்னாடி வடசென்னை அப்படின்னு ஒரு படத்துலயும் தனுஷ் ரவுடியாதான் நடிச்சிருந்தார்… மகா மட்டமான டேஸ்ட் கதைய உலக தரத்துக்கு எடுத்துட்டோம்னு ஊர் முழுக்க சொந்த காசுல விளம்பரம் பண்ணிகிட்ட மாதிரி… இந்த மாரி2 படமும் பிரமாண்ட படம்னு சொந்த காசுல வௌம்பரம் பண்ணிக்க வேண்டியதுதான்… ஒரு உண்மைய சொல்லணும்னா இந்த மாரி2 படம் கிறிஸ்மஸ் கொண்டாட்ட ரிலீஸ் பட்டியலில் திடீ...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
கனா விமர்சனம் கல்லடியை விட சொல் அடிக்கு வீரியம் ஜாஸ்தி என்பார்களே அது உண்மைதான்… அருண் ராஜா காமராஜாவின் கனா படத்தில் வசனங்களில் கேட்கும் "வினா" க்களுக்கு விடை கிடைத்தால் இந்தியா உலகை நிச்சயம் ஆளும். கிரிக்கெட் வெறியரான அப்பா சத்யராஜ் அழுகையை பார்க்கிற குட்டிப் பெண். அப்பாவின் அழுகைக்கு காரணம் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றது. அந்த நொடி அந்த குட்டிப் பெண் எடுக்கிற முடிவு "தான் எப்படியும் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்று அப்பாவுக்கு சந்தோஷம் தரவேண்டும்" என்பதுதான். அப்பாவாக சத்யராஜ் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்குடான்னு படம் பாக்கும் ஒவ்வொருவரும் யோசிக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த இடத்திலும் நடிகையாக தெரியாம கேரக்டராவே இருப்பது பலம். அப்பாவி விவசாயியாக அதே நேரம் நாட்டுப்பற்று மிக்க விளையாட்டு ரசிகராக வாழ்ந்திருக்கிறார் சத்யராஜ். ...
சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி..!

சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு 'தயாரிப்பு எண் 2' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.  "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என்  கண்முன்னால் தெரிவதால், மிகவும்...
பேட்ட பட உலக உரிமையை கைப்பற்றிய பிரபலம்..!

பேட்ட பட உலக உரிமையை கைப்பற்றிய பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!! சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தி...
தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட கடைசி எச்சரிக்கை..!

தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட கடைசி எச்சரிக்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடைசி எச்சரிக்கை குழுவுக்கு வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர் தாணு  'கடைசி எச்சரிக்கை' டீசர்… வெளியிட்டார் கலைப்புலி தாணு! சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. முன்னதாக கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தின் தலைப்பும் டிசைன்களும் மீடியா உலகில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தன. இந்த நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் கலைப்புலி தாணு. டீசரைப் பார்த்த பிறகு அவர் பேசுகையில், "இன்று உலகம் மிக ஆபத்தான சூழலில் உள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியுள்ளது கடைசி எச்சரிக்கை. அனைவரும் பார்க்க வேண்டிய படம். இயக்குநர் சுகுமார் கணேசனுக்கு வாழ்த்துகள்," ...
கார்த்தியின் தேவ் முதல் பாடல்..!

கார்த்தியின் தேவ் முதல் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கார்த்தி – ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பாடலின் ஆடியோ  வெளியீடுகார்த்தி நடிக்கும் ‘ DEV’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இன்று ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிகப்படியான பார்வையாளர்களால் கேட்கப்பட்டது. தாமரையால் எழுதப்பட்ட பாடல் வரிகள் இளசுகளை கவரும் வகையில் உள்ளது. ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.இப்பாடல் காட்சி சுமார் 6 நிமிட நேரம் கொண்ட பாடலாக உருவாகி வரும் இப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் மற்றும் இக்காலகட்டத்தின் ரசிகர்களுக்கேற்ற வகையில் இருக்கும்.‘தேவ்’ படம் ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாயகன்,...
ஹிப் ஆப் ஆதியின் நட்பே துணை முதல் பாடல்..!

ஹிப் ஆப் ஆதியின் நட்பே துணை முதல் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படம் ‘நட்பே துணை’. இப்படத்தின் கதாநாயகனாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும், கதாநாயகியாக புதுமுகம் அனகாவும் நடிக்கிறார்கள்.இப்படத்தின் முதல் பாடல் கேரளா கலந்த தமிழ் பாடலாக வந்துள்ளது. இதன் வரிகள் தமிழ் கலந்த மலையாளமாக இருப்பதால் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இப்பாடலை ‘ஹிப் ஹாப் தமிழா‘ ஆதியே எழுதி பாடியும் இருக்கிறார். இவருடன் ரஞ்சித் உன்னி, ஹரிஹரசுதன், நிகில் மேத்யு, விஷ்ணுப்ரியா, லதா கிருஷ்ணன், நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே பலராலும் பார்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றுள்ளது. அடுத்த பாடலை எப்போது வெளியிடுவார்கள் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது.‘நட்பே துணை’ என்று பெயர் வைத்தாலும் இப்படத்தில் காதல், விளையாட்டு என்று அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படத்தின் கதை இருக்கும் என்று இப்படத்தின் இயக...