கண் தெரியாத பெண்ணாக வரலட்சுமி..!
வரலக்ஷ்மி ராதாரவி சீதா சரண்யா அருண் தேவஸ்யா ராஜேஷ்கண்ணா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ஜேகே . இந்தப்படத்தில் வரலக்ஷ்மி கண்தெரியாத பெண்ணாக புதிய பாத்திரத்தில் நடிக்கிறார் .
படம் பற்றி இயக்குநர் ....இந்தப்படம் கிரைம் திரில்லர் ஆக , தயாராகிறது ,திரில் படங்கள் பலவந்திருந்தாலும் இப்படம் பெண்களை மையமாக வைத்து செண்ட்டிமென்ட்டோடு , புதிய கோணத்தில் தயாராகிறது .படம் ஒரே கட்டபடப்பிடிப்பாக தொடர்ந்து நடந்து படம் முடிய இருக்கிறது .
ஒளிப்பதிவு மேத்யூஸ் ,இசை ஷியாம் சண்டைப்பயிற்சி சிறுத்தைகணேஷ் எடிட்டிங் வெங்கி கதை திரைக்கதை வசனம் இயக்கம் jk.தயாரிப்பு ஜெயபிரகாஷ் , பவித்ராஜெயராம்
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான பெயர் தேர்வு நடைபெறுகிறது.
...









