முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா – அந்தோணி தாசன் கூட்டணி
*முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா - அந்தோணி தாசன் கூட்டணி*
'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி' திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்...









