சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

MOVIES

நாளை செம போதயோடு வரும் அதர்வா

நாளை செம போதயோடு வரும் அதர்வா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் புதிய டிரைலர் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக இருப்பதாக நடிகர் அதர்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு...
அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:- “தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பி...
இந்த வாரம் கடும் போட்டியில் 4 படங்கள்

இந்த வாரம் கடும் போட்டியில் 4 படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்கள் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முன்பதிவு பதிவு அடிப்படையில் படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் தனி குழு அமைக்கப்பட்டு அவர்களுடைய அங்கீகாரத்துடன் வாரந்தோறும் 3 அல்லது 4 படங்கள் திரைக்கு வருகின்றன. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ‘மெர்குரி’, ‘முந்தல்’, ‘தியா’, ‘பாடம்’, ‘பக்கா’, ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. வருகிற 11-ந்தேதி முக்கிய படங்கள் திரைக்கு வருகின்றன. விஷால்-சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதி - மகிமா நம்பியார் நடித்திருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இவை தவிர கீர்த்தி சுரேஷ், சமந்தா,...
நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் – ரஜினிகாந்த்

நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது, இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன். சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்க...
காதல் மோதல் த்ரில்லர் கலந்த எம்பிரான்..!

காதல் மோதல் த்ரில்லர் கலந்த எம்பிரான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்! இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.  யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த 'பிரசன் பாலா' இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நட...
டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.

டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.  அவர்கள் இன்று வெளியிட்டார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள்  கூறும்போது, "டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர். தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில், இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில்  டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன், தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று ...
குடும்பத்தோடு பார்க்கும் தரமான படமாக  “அண்டாவ காணோம்” படம் இருக்கும் – தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்

குடும்பத்தோடு பார்க்கும் தரமான படமாக “அண்டாவ காணோம்” படம் இருக்கும் – தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
  தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக  திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும்  "அண்டாவ காணோம்" திரைப்படம் நீக்கும் என தெரிவித்தார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார். ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரிக்கும் அவர் மேலும் கூறியதாவது "  "அண்டாவ காணோம் , நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள்  விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்க...
சீனாவில் பாகுபலி 2ஆம் பாகம் வசூல் சாதனை – 2 நாளில் ரூ.36 கோடி வசூல்

சீனாவில் பாகுபலி 2ஆம் பாகம் வசூல் சாதனை – 2 நாளில் ரூ.36 கோடி வசூல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சீனாவில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டு நாளில் 36 கோடி ரூபாயை வசூலை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய திரையரங்குகள் முழுவதையும் ஆக்கிரமித்தது பாகுபலி 2 திரைப்படம். பன்மொழிகளில் வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் மற்றும் கதாநாயகியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணா, நாசர், சத்யராஜ், தமன்னா, ரானா டக்குபதி எனப் பலர் நடித்தனர். 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில், கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தச் சாதனைகளை முறியடிக்க பாகுபலி 2 சீனாவில்  வெளியானது. சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகும் முதல் நாளிலேயே, 18 கோடியே 66 லட்சம் ரூபாய் அளவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூலில் வரலாற்று...
இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை – சங்கிலி முருகன்

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை – சங்கிலி முருகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சங்கிலி முருகன் தாக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”. அறிமுக இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும். நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக 'அம்மா கிரியேசன்ஸ்' சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டனர். அப்போது  பேசிய ஆர்.கே.சுரேஷ், “நான் தயாரிப்பாளராக சி...
K7 ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும்  “நரை”

K7 ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே, மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையை ஒரு அதிர்ச்சியான சம்பவம் தலைகீழாக மாற்றிப் போடுகிறது. அந்த சம்பவத்திற்கும், முதியவர்களுக்கும் என்ன தொடர்பு? அந்த சம்பவம் யாரால் நிகழ்த்தப்படுகிறது?, அவர்களை இந்த முதியவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடனும், முடிச்சுகள் நிறைந்த திரைக்கதையுடனும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் அனுப் ஆகியோர் நடித்திருப்பது இப்படத்தின் முக்கியமான அம்சம். இவர்களுடன் ரோஹித் என்னும் புதுமுக நாயகனும், ...