புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

மீண்டும் தொடங்கி உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு

மீண்டும் தொடங்கி உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மீண்டும் தொடங்கி உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம...
வலிமை அப்டேட் வந்தாச்சு….

வலிமை அப்டேட் வந்தாச்சு….

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை அப்டேட் வந்தாச்சு.... அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது....
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி பெற்றவர் சுந்தர்.சி. இவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி செயோன் இயக்குகிறார். வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படம் கிரைம் டிராமாவாக உருவாக இருக்கிறது. இதில் சுந்தர்.சி.யுடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது...
ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை!

ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை! சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின...
அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, விமர்சனம்
  மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வந்துள்ள அன்பிற்கினியாள் தமிழில் புது கான்செப்ட். மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ஹெலன். இந்த படத்தை தமிழில் அன்பிற்கினியாள் ஆக மாறியுள்ளது. அப்பா - மகள் பாச கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது. அதைப் போல ஒரிஜனல் ஹெலன் திரைக்கதைக்கு எந்த சேதமும் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.   இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்திற்காக பெருசாக எதையும் மெனக்கெடவில்லை. அதே நேரம் ஒரிஜினல் கதையில் இருந்த விறுவிறுப்பை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் கோகுல். ரீல் அப்பா-மகள் கதையாக இல்லாமல் இது ரியல் அப்பா அருண்பாண்டியன், மகள் கீர்த்தி பாண்டியன் இந்த படத்திலும் அப்பா மகளாக நடித்திருக்கிறார்கள். கதைப்படி அப்பா அருண்பாண்டியன், எல்ஐசி ஏஜன்டாக இருப...
எனக்குள் சிறந்த நடிகன் என்பதை உணர்த்திய படம் – அருண் பாண்டியன்

எனக்குள் சிறந்த நடிகன் என்பதை உணர்த்திய படம் – அருண் பாண்டியன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    *அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை* நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்.. நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது, "அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிக...
தோப்புக்கரணம் போட்ட தாதா

தோப்புக்கரணம் போட்ட தாதா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள்
  பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா   பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் " தோப்புக்கரணம் " இவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான " கைலா " படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.   " தோப்புக்கரணம் " படத்தில் கோகன் ,அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த "ஸ்டீவ் " நடித்திருக்கிறார். இவர்க...
பாக்யராஜின் முந்தானை முடிச்சு 37 ஆண்டுக்கு பின் சசிகுமார் நடிப்பில் உருவாகிறது!

பாக்யராஜின் முந்தானை முடிச்சு 37 ஆண்டுக்கு பின் சசிகுமார் நடிப்பில் உருவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாக்யராஜின் முந்தானை முடிச்சு 37 ஆண்டுக்கு பின் சசிகுமார் நடிப்பில் உருவாகிறது! 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌உருவாகும்‌ k.பாக்யராஜ் ன் " முந்தானை முடிச்சு " சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பெரும் வெற்றியடைந்த "சுந்தரபாண்டியன்", விரைவில் திரைக்கு வரவுள்ள "கொம்பு வச்ச சிங்கம்டா' படங்களுக்கு பிறகு மீண்டும் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்க படுவார்கள் என தயாரிப்பாளர் JSB சதீஷ் தெரிவித்தார்....
ஹீரோயினுக்கு வெயிட் சேரும் படத்தில் இணைந்த யோகிபாபு!

ஹீரோயினுக்கு வெயிட் சேரும் படத்தில் இணைந்த யோகிபாபு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  *யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக 'கங்காதேவி.'* 'ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, 'சண்டிமுனி' படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு 'கங்காதேவி' என பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார். படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ''ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா - தேவின்னு இரட்டை ...
“தி மார்க்ஸ்மேன்”  ஹாலிவுட் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என  இந்திய மொழிகளில் டெல் கணேசன் ரிலீஸ் செய்கிறார்!

“தி மார்க்ஸ்மேன்” ஹாலிவுட் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் டெல் கணேசன் ரிலீஸ் செய்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, உலக செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது   Tamil Trailer https://youtu.be/yy2Av69Z51c English Trailer https://youtu.be/xISt46p4J5o   கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். ...