மாநாடு படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே ரூ.10 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிச்சார்.
தொடர்ந்து சில நாட்கள் மாநாடு படத்தின் தினசரி வசூலை ட்விட்டரில் பகிர்ந்து வந்தார்.
இதே மாநாடு படத்தின் 25வது நாளில் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைஞ்சதா அறிவிக்கப்பட்டது.
அதற்கு பிறகு மாநாடு படம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தியேட்டர்களில் மாநாடு படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாநாடு படம் ரிலீசாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இது பற்றி சுரேஷ் காமாட்சி வேதனையுடன் நேத்து நைட் சோசியல் மீடியாவில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாளை 75வது நாள் மாநாடு. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றி...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து பல தரப்பட படங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் படம் "குதிரை வால்'. கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடிக்கின்றனர்.அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்குகிறார்கள். ராஜேஷ் கதை எழுதியுள்ளார். இது அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் சினிமாவாகவும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இது புதிய முயற்சியாக இருக்கும் என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் சார்பாக விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்
மார்ச் 4 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறத...
“கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை ச...
டார்க் காமெடி படங்கள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் பேசப்படும். அப்படி பேசு பொருளாக மாறிய படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி.
தலைப்பைப் போலவே படம் முழுக்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.
சரி என்னதான் கதை...
பல நூறாண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு அரசன் பஞ்சலோகத்தால் ஆன சின்ன பன்றி சிலையை வைத்திருக்கிறார்.
இந்த சிலையை வைத்திருபவர்கள் செல்வ செழிப்பில் இருப்பார்கள் என்பதால் பலர் அந்த பன்றி சிலையை திருட முயற்சிக்கிறார்கள்.
எப்படியோ அந்த சோழ தேசம் வருகிறது. அங்கே சிலை மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது.
இது நடந்து பல நூறாண்டுகளுக்கு பின் அதாவது நிகழ்கால வருடத்தில் தொல்துறை ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் சிக்குகிறது அந்த பன்றியின் சிலை.
இதை தெரிந்து கொண்ட ஒரு ரவுடி ஆராய்ச்சியாளரைக் கொன்று, சிலையை கைப்பற்றிச் செல்கிறான்.
அந்த ரவுடியுடன் இருந்த 2 பேர் அந்த சிலையை எங்கோ மறைத்து வைக்கி...
இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் அம்மா பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் குதுகலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது:
“மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ‘கணம்’ படத்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டிருந்த சமயத்தில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவித்து ரசிகர்களை சந்தசோஷப்படுத்தியது படக்குழு.
இந்நிலையில், டான் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்யா குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்க...
தெலுங்கு திரை உலகின் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டேத்தி. அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிகரிடம் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல், நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார்.
இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதனை குறிப்பிட்ட...
தொலைக்காட்சித் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி பிறகு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் 2012-இல் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன்பின் எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, டான் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர் மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
இதனை குறித்து விரிவான விளக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்.
இந்...