வெள்ளிக்கிழமை, மே 29
Shadow

MOVIES

விபச்சாரி கேரக்டரில் அஞ்சலி நடித்துள்ள ரோசாப்பூ..!

விபச்சாரி கேரக்டரில் அஞ்சலி நடித்துள்ள ரோசாப்பூ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
ரோசாப்பூ’ என்ற மலையாள படத்தில் நடிகை அஞ்சலி, விபச்சாரி கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக ‘அங்காடி தெரு’ படத்தில் நடித்தார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக பார்த்து நடித்து வந்தார் அஞ்சலி. தமிழில் மார்க்கெட் அவ்வளவாக இல்லை என்பதால் நடிகை அஞ்சலி மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். https://youtu.be/UhC0uD7aQlA தற்போது நடிகை அஞ்சலி மலையாளத்தில் ‘ரோசாப்பூ’ என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி விபச்சாரியாக நடித்துள்ளதாக படத்தின் டிரைலரில் தெரிகிறது. தற்போது அஞ்சலி நடித்த ‘ரோசாப்பூ’ படத்தின் டிரைலர் தான் சமூக வலைத்தளங்க...
விஜய் சேதுபதியின் 8 கெட்டப்பு…  ஏகப்பட்ட வலி ‘ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்’..!

விஜய் சேதுபதியின் 8 கெட்டப்பு… ஏகப்பட்ட வலி ‘ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
யதார்த்தமான நடிப்பால் சிக்ஸர் அடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் எமன் என்ற பெயரில் நடித்து வரும் விஜய் சேதுபதி, படத்துக்காக நிறைய கெட்டப் போட்டிருக்கிறார்.   https://youtu.be/Ta3Yruzx_lA விஜய் சேதுபதி நிறைய மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் அவருக்கு நிறைய கெட்டப்புகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புக்கு மேல் நடித்திருக்கிறார். மேக்கப் போட ஆரம்பித்துவிட்டால் அந்த கெட்டப்பின் ஷூட் முடிக்கிற வரைக்கும் மேக்கப்பை கொஞ்சம்கூட அவர் கலைக்க மாட்டார். கெட்டப்புக்கு ஏற்றவாறு முடி அலங்காரம் செய்யும்போது அவருக்கு ரொம்ப வலியாக இருக்கும். நீண்ட முடியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது அது மிகவும் வலிக்கும். ஆனால், அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விஜ...
பொங்கல் ரிலீசாக  விறுவிறுப்பாக தயாராகும் விக்ரம்  ‘ஸ்கெட்ச்’

பொங்கல் ரிலீசாக விறுவிறுப்பாக தயாராகும் விக்ரம் ‘ஸ்கெட்ச்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். விஜயசந்தர் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறத...
சூடுபிடித்த  சூர்யா – கீர்த்தி சுரேஷ் ஜோடியின்  `தானா சேர்ந்த கூட்டம்’  பட வியாபாரம்..!

சூடுபிடித்த சூர்யா – கீர்த்தி சுரேஷ் ஜோடியின் `தானா சேர்ந்த கூட்டம்’ பட வியாபாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியருந்தது. அதேபோல் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படத...
புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்   “ செயல் “  ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.   கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.                                                           படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..                                                                                                           வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வா...
கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் –   புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் –   புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன்    புதுமுகம் சித்தார்த்தா சங்கர் சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம்  சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாகா வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.  இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குரித்து சித்தார் சங்கரிடம் கேட்டபோது.. நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா  அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான...
ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயம் ரவி மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.  ...
கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

கேரளாவில் ஆயுர்வேத கிசிச்சை எடுக்கும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  உடல் எடை குறைந்து ஸ்லிம்மான அனுஷ்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிறார்கள். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தன்னுடைய உடல் எடையை வெகுவாக அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால், அம்மா இடுப்பில்  ஏறிய குழந்தை போல. ஏறிய இடை இறங்குவேனா என அடம்பிடித்தது. இதனால், சில வருடங்கள் மிகவும் அவதிப்பட்டு  வந்தார் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்தில் கூட அப்படியே தான் நடித்தார். கிராஃபிக்ஸ் மூலம் அவருடைய உடலை அழகாகக் காட்டினார்கள். உடல் எடை குறையாததால், வேறெந்த படத்திலும் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் அனுஷ்கா. இத்தனைக்கும் அவர் யோகா  டீச்சர் வேறு. ஒருவழியாக தீவிர முயற்சிக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக முதுகுவலி பிரச்னையால்  அவதிப்பட்டு வரும் அனுஷ்கா, கேரள...
‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

‘வேலைக்காரன்’ பெற்ற ‘யு’ சான்றிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கின்றனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் 22ம் தேதி படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்....
தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அத...