செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10
Shadow

MOVIES

செம கமர்சியலான காலேஜ் ரோடு – பாராட்டிய ரஞ்சித்

செம கமர்சியலான காலேஜ் ரோடு – பாராட்டிய ரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'செம கமர்சியலாக இருக்கு காலேஜ்ரோடு ' பாராட்டிய பா.இரஞ்சித் . நெகிழ்ச்சியில் நடிகர் லிங்கேஷ். பா.இரஞ்சித்தின் கபாலி , கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் , சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு காலேஜ்ரோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். M P Entertainment தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார். ஆப்ரோ இசையமைப்பில் கதைநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.விரைவில் திரைக்கு வரும் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார் இந்தபடத்தை சமீ...
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முதல் ஹிந்தி திரைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முதல் ஹிந்தி திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிர...
ரசிகர்களை கவர்ந்த கே.ஜி.எப்-2 பாடல்!

ரசிகர்களை கவர்ந்த கே.ஜி.எப்-2 பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டூபன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது....
கள்ளன், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்கள் திரையிடும் பிரச்னை – தமிழ்நாடு அரசு தலையிட தமுஎகச கோரிக்கை

கள்ளன், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்கள் திரையிடும் பிரச்னை – தமிழ்நாடு அரசு தலையிட தமுஎகச கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கள்ளன், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்கள் திரையிடும் பிரச்னை -தமிழ்நாடு அரசு உடனே தலையிட தமுஎகச கோரிக்கை 1. சந்திரா தங்கராஜ் இயக்கிய “கள்ளன்” என்ற படம் தணிக்கை முடிந்து வெளியாகவிருந்த நிலையில், அப்படம் அதே தலைப்பில் வெளியாவதற்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கு  நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனையடுத்து 2022 மார்ச் 18 அன்று படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் மேற்கொண்டிருந்த நிலையில், தீர்ப்புக்கு விரோதமாக சாதியமைப்புகளைச் சேர்ந்த சிலர் இயக்குநரை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். இயக்குநரை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க சொற்களால் ஏசி மனவுளச்சலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், கள்ளன் படத்தைத் திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திரையரங்கங்களை அச்சுறுத்தி ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரையரங்குகள் பலவற்றை படத்தைத் திரையிடாமல் பின்வாங்கச்...
”வாடிவாசல்” பட டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்ட சூர்யா!

”வாடிவாசல்” பட டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்ட சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னை புறநகரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். தொடர்ந்து நாவல்களை படமாக்கிவருகிறார் வெற்றிமாறன். லாக்கப் நாவலை விசாரணை என்றும், வெக்கை நாவலை அசுரன் என்றும் படமாக்கியவர், தற்போது விடுதலை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இதுவும் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை படமாக்குகிறார். தனது படத்துக்கும் வாடிவாசல் என்றே பெயர் வைத்துள்ளார். முந்தைய நாவல்களை படமாக்குகையில் எப்படி நாவலுக்கு வெளியே கற்பனையாக கதையை எழுதி சேர்த்தாரோ அதுபோல் வாடிவாசல் நாவலிலும் வெற்றிமாறனே எழுதியிருக்கும் புனைவும் இடம்பெறுகிறது. சூர்யா நடிக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ற்கனவே சூர்யா மாடுபிடிக்க பயிற்சி எடுத்துள்ளார். சென்னை இசிஆரில் வாடிவாசல் படத்தில் டெஸ்...
தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham

தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், வீடியோ
தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham   https://youtu.be/Je_7Ymy9bsk   சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு 14.9.1957 அன்று கீழத்தூவலில் 5 பேரை போலீசார் படுகொலை செய்த சம்பவம் நீங்காத வடுவாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. உயிரிழந்தவர்களுக்கு ராமநாதபுரம் கீழத்தூவலில் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழத்தூவலில் 1957ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவமணி, சித்திரவேல், ஜெகநாதன், முத்துமணி, தவசியாண்டி ஆகிய 5 பேரை விசாரணை எனக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களின் கைகளை, கண்களைக் கட்டி சுட்டுக் கொன்றனர். நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு கீழத்தூவல் கிராமத்தில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. இந்த படுகொலை காமராஜர் ஆட்சி...
நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி!

நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் ...
செல்ஃபி படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கு – வெற்றி மாறன்

செல்ஃபி படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கு – வெற்றி மாறன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண...
கள்ளன் படத்தை ஓட விடாமல் தடுக்கசதி முதல்வர் தலையிடுங்கள் – பெண் இயக்குனர் கோரிக்கை

கள்ளன் படத்தை ஓட விடாமல் தடுக்கசதி முதல்வர் தலையிடுங்கள் – பெண் இயக்குனர் கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  'கள்ளன்' திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முதல்வருக்குவேண்டுகோள். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன. 'கள்ளன்' என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ், "நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்ச...
அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இதுவரை ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என கதை சொன்னது போரடித்து விட்டது போலும்... Non -Linear  முறையில் கதை சொல்கிறேன் என களமிறங்கியவர்களை தனது பேனர் மூலம் வெளியே காட்டியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் ”குதிரைவால்” படம் அறிவிப்பின் போதே வித்தியாசமான போஸ்டரில் ஆரம்பித்து டிரைலர் என ரிலீஸ் வரை புரியாத புதிராக இருந்தது மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதே. இந்த குதிரைவாலுக்கு விடை கிடைத்ததா? கதை நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து தீடீரென கண் விழிக்கிறார்... தன் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் காரணம் கலையரசனுக்கு குதிரையின் வால்...