செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10
Shadow

MOVIES

சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி!

சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் கூட்டணி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அயன், கவண், கோ, காப்பான் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ...
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி! அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய க...
R. கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கும் புதுப்படம்!

R. கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது. மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5' தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட" தி கிரேட் இந்தியன் கிச்சன் " படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு...
“ஆராட்டு” எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

“ஆராட்டு” எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
"ஆராட்டு" எனும் மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் காட்சியில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படமும் இதுதான். இந்நிலையில், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ எனும் மலையாள படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன், ஏ.ஆர்.ரகுமான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியா...
தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு!

தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு! 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது....
கர்ணன்-டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கர்ணன்-டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மார்ச் 23-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  ...
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழு!

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழுவினரின் திடீர் அறிக்கை! விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜ...
விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி படத்தில் "குக் வித் கோமாளி" புகழ்! சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சந்தானத்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் புகழ், பிசியான நடிகராக வலம்வருகிறார்.  ...
முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத் தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார் இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின் போது இதனை உறுதிப்படுத்தினார். இயக்குனர் லிங்குசாமியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பணியாற்றுவது இதுவே மு...
சிம்பு பாடியுள்ள விஜய் சேதுபதி படம்!

சிம்பு பாடியுள்ள விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, நடிகர்கள்
  அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். விவேக், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘முருகா’ எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுல்தான் படத்திற்காக நடிகர் சிம்பு பாடிய ‘யாரையும் இவ்ளோ அழகா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இடம்பெறும் ‘முருகா’ பாடல் மீதான எதிர...