400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதிலும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் வித்தியாசமான கான்சப்ட் கொண்ட படம் என்பதால், அப்படம் மீது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரே படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான படங்களை வெளியிட்டு வரும் கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் வி.சத்யமூர்த்தி கூறுகையில், “இது வரை நான் 'ஒரு நல்லநாள் பாத்து சொ...









