நான் ஒரு ரஜினி ரசிகை பக்கா பட விழாவில் நிக்கிகல்ராணி அறிவிப்பு..!
அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும்! இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை! ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்...









