புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி!

பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறுதரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. துஷாரா, காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். "உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு , எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்தபடம். நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது, என்று தனது நாடககால வாழ்வின் ...
புது முகங்களின் காதல் காவியமான ‘பனாரஸ்’ நவம்பரில் ரிலீஸ்!

புது முகங்களின் காதல் காவியமான ‘பனாரஸ்’ நவம்பரில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*காதல் காவியமான 'பனாரஸ்' நவம்பரில் வெளியாகிறது*   புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான 'பனாரஸ்' திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...
ஜெயிலரில் இணையும் ஜெய் !

ஜெயிலரில் இணையும் ஜெய் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
‘கொஞ்சம் பேசினால் என்ன’ படத்தின் டீசரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

‘கொஞ்சம் பேசினால் என்ன’ படத்தின் டீசரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'தும்பா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இப்படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில் லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/VigneshShivN/status/1565294502327160834?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembe...
250 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து வீடியோ பாடல்!

250 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து வீடியோ பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது. அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து வீடியோ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். https://twitter.com/sunpictures/status/1565563239748042752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5...
விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்

விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம்,  இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார்,சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர், ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா.   ஹாலிவுட் படங்களில் தான் இதுபோன்ற ஓப்பனிங் சீன்ஸ் இருக்கும். அந்தளவுக்கு கோப்ராவின் ஆரம்பமே மிரட்டலாக தொடங்கி பார்வையாளர் கவனத்தை தன் பக்கமாக இழுத்துக் கொள்கிறது.   ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர், இந்தியாவின் வட மாநில முதலமைச்சர் ஒருவர், ரஷ்யாவில் உள்ள ராணுவ தளபதி ஒருவர் என வரிசையாக மிக முக்கிய நபர்கள் திடீர்திடீரென  கொல்லப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம், கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவது ஏன்? யார் இவர்களை கொல்வது என்பதை ச...
தெலுங்கு ரசிகர்களுக்கும் எனக்கும்  இடையே எப்போதும் பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது’ – சீயான் விக்ரம் உருக்கம்

தெலுங்கு ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே எப்போதும் பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது’ – சீயான் விக்ரம் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எனக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது’ - சீயான் விக்ரம் உருக்கமான பேச்சு* சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் 'கோப்ரா'. கணித புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், 'கோப்ரா' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது. இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, ...
படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் – நடிகர் விக்ரம்!

படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் – நடிகர் விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது விக்ரம் பேசியதாவது, ''உங்களுக்கு 'அந்நியன்' படம் பிடிக்கும் என்றால் இந்தப...
காமம் அதைச் சுற்றி நடக்கும் கதை தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரீஸ்

காமம் அதைச் சுற்றி நடக்கும் கதை தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற அந்தோலஜி தொடர் மிகவும் பிரபலமானது. காமம் அதைச் சுற்றி நடக்கும் நான்கு கதைகள் என்ற வகையில் அந்தப் படம் உருவாகியிருந்தது. கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப் மற்றும் திபாகர் பானர்ஜி நான்கு வெவ்வேறு பாகங்களை இயக்கியிருந்தனர் அதில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் படப்பிடிப்பில் செப்டெம்பர் மாதம் தமன்னா இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது....
வைரலாகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வைரலாகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (29.08.2022) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://twitter.com/gvprakash/status/1563773862999105537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembe...