செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”
செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார்.
மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”.
மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.
இயக்குநர் மணிபாரதி கூறியதாவது...
பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறைய...









