”என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின் பேசும் போது, இப்படத்தினை வழங்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் சார், என்னிடம் முதன் முதலில் கேட்டார். பின்னர் ஸ்ரீகாந்த் அவர்களின் வற்புறுத்தலால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்… சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.
ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந...









