கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
*“ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான்” ;
‘பன் பட்டர் ஜாம்’ நாயகன் ராஜு பெருமிதம்*
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்
‘பன் பட்டர் ஜாம்’.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,
பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் ல...









