பைரி விமர்சனம் 3/5
தமிழ் சினிமாவில் புறாப்பந்தயத்தை வைத்து வெளியாகும் முதல் படம் பைரி
நாகர்கோவில் ஏரியாவில் 19-ஆம் நூற்றாண்டில் புறாப்பந்தயம் இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இப்போதும் புறாப்பந்தயம் நடப்பதாகவும் கதை அமைத்துள்ளார் இயக்குநர். ஹீரோ டீம் பங்கேற்கும் புறா பந்தயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கல்கள், அதன் மூலம் எழும் பல்வேறு முடிச்சுகள் என ஒரு விறுவிறு திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி
நாகர்கோவில் தான் படத்தின் கதைக்களம். ஊரை சுற்றி இருக்கும் இளைஞர்கள் அனைவரும் புறா ரேஸ் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மதுரைக்கு எப்படி ஒரு ஜல்லிக்கட்டோ, அதேபோல் அந்த பகுதி மக்களுக்கு புறா ரேஸ் விடுவது என்பது அவர்களின் மூச்சாக இருக்கிறது.
புறாவை தங்களது உயிராக எண்ணி ஒவ்வொருவரும் வளர்த்து வருகின்றனர். அதில் என்னென்ன ஜாதி உள்ளது. அவற்றை எப்படியெல்லாம் பேணி பாதுகாத்து ர...









