வாழும் கலைவாணர் விவேக் “எழுமின்” விழாவில் அமைச்சர் பாராட்டு
“எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்!
“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” , பாலகிருஷ்ண ரெட்டி, கூட்டுறவு சங்க மாநில தேர்தல் கமிஷனர் ராஜேந்திரன்IAS , நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் த...









