செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

தமிழக அரசியல்

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.   அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      தமிழ்த்தாயை கவுரவிக்கும் விதமாக முழு பாடலையும் பாட வேண்டும் என்றும், இதற்காக அரசு இணையதளம் உள்ளிட்ட ஆவணங்களில் முழு பாடலையும் வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜெ.மோகன்ராஜ் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த' என தொடங்கும் பாடல், தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடப்படுகிறது. ஆனால் இதில் பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சுந்தரனார் எழுதிய முழு பாடலில், பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல, கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டுகள் கூறியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற அரசாணையை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைகளை ஏற்று முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன...
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ 2.87 கோடி ரொக்கம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ 2.87 கோடி ரொக்கம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார். இதற்கிடையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு...
நள்ளிரவில் பெரியார் சிலையை இடித்து தள்ளிய லாரி… விழுப்புரத்தில் பரபரப்பு!

நள்ளிரவில் பெரியார் சிலையை இடித்து தள்ளிய லாரி… விழுப்புரத்தில் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    விழுப்புரம் காமராஜார் சாலையில் இருந்த தந்தை பெரியார் சிலை மீது கனரக லாரி மோதியதில் சிலை முழுவதுமாக சேதமடைந்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காமராஜார் சாலை. இந்த சாலையில் தலைமை தபால்நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டபாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டையர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்ட்ர மாநிலம் புனே நோக்கி சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலைக்கு சென்றுள்ளது வழி தவறி வந்ததை உனர்ந்த ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றுள்ளார், குறுகிய சாலை என்பதாலும் நீண்ட கனரக லாரி என்பதால் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியது இதில் தந்தை ப...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சென்னை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகன் 2016-21 ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருவாய்க்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துற...
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா பரவல் வழிகாட்டி விதிமுறைகளின்படி, தைப்பூச தினமான நேற்று, கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று தைப்பூச விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற தைப்பூச விழா  சிறப்பு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்....
டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் – முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் – முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறினர். இந்ந...
நீட்தேர்வு விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

நீட்தேர்வு விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பான மனுவை அளித்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், கடந்த செப்.13-ல் சட்டப்பேரவையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவரை தமிழக எம்பிக்கள் கடந்த டிச.28-ல் சந்திக்க முயற்சித்தனர். எனினும், சந்திப்பு நடைபெறாததால், அவரது அலுவலகத்தில் நீட் தேர்வுதீர்மானம், ஆளுநர் அனுப்பாதது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனு அன்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்துக்கு அனுப்பப்பட...
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எலன் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எலன் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
    மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக , டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் கூறிய நிலையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். உலக அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 7 வகையான மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனினும், டெஸ்லா நிறுவனம் இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால், டெஸ்லா கார்கள் இந்தியாவில் கிடைப்பது காலதாமதமாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்கிடம்இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எத...