புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக முடியாது – ப.சிதம்பரம் பிரச்சாரம்

27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக முடியாது – ப.சிதம்பரம் பிரச்சாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி செயப்படுத்தப்படும் என்றும், தேர்தல் பிரசார கூட்டத்தில் நின்று கொண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பேசுகின்றனர். அவர்கள் தேவையில்லாமல் பிதற்றலாக பேசக் கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், சட்டமன்றத்தை முடக்குவோம் என்று கூறுகின்றனர். சட்டசபையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனப்படி அது முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. 2...
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிக்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்குப்பதிவு!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிக்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி புகார் அளித்த சக தீட்சிதர் சாமி கும்பிட சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான கணேஷ் தீட்சிதர் என்பவர் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 தீட்சிதர்கள் பேர் கொலை முயற்சி வழக்குபதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்...
EPS-OPS 2 அமாவாசைகள் சொல்றாங்க 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு  – உதயநிதி சரவெடி!

EPS-OPS 2 அமாவாசைகள் சொல்றாங்க 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு – உதயநிதி சரவெடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  சட்டசபையை முடக்கி விட்டு தேர்தலை சந்தித்தால் ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது என திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், “தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பொழுது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தமிழகத்தில் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம். தமிழகத்தில் முதலாவது அலையின் போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஒரு கோடி அளவிற்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பு ஊசி கண்டிப்பாக போட வேண்டும் என்று மக்கள் மத்தியில...
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு - சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்! வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு முனபாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முன்னதாக பிறந்த நாளை முன்னிட்டு தாயாரிடம் சி.என்.ஆர். ஆசி பெற்றார்.   சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது. பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உ...
மகான் படத்தால் காந்தியை கொச்சைப்படுத்தி விக்ரம் பணம் சேர்க்க வேண்டுமா? – தமிழருவி மணியன் கண்டனம்!

மகான் படத்தால் காந்தியை கொச்சைப்படுத்தி விக்ரம் பணம் சேர்க்க வேண்டுமா? – தமிழருவி மணியன் கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
    மகான் படம் எடுத்தவர்களுக்கும், மராட்டியத்தில் கோட்சேவை வழிபடு நாயகனாக வடிவமைத்து நாடகம் நடத்துபவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை என காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும், அவரது மகனும் இணைந்து நடித்துள்ள ' மகான் ' படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். இந்தப் படம் சார்ந்த இயக்குனரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களோ காந்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்கு மேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. ...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் விரைவில்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் விரைவில்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பழனிசாமி - பன்னீர்செல்வம் சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல விதமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அவர், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது பேசியதாவது, நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், திமுக வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள...
பண மோசடி புகார் ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை!

பண மோசடி புகார் ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆவினின் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகார்களில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்ட குற்ற...
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பில்லாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்... ஆனால் மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் திமுகவின் அராஜகம் அத்துமீறலுக்கு மாநில தேர்தல் ஆணையம் துணைபோகிறது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.      ...
தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் பேசிய அவர், கூறுகையில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், குடும்ப அட்டைக்கு செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்கள் செய்தார்களா?  மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாக சொன்னார்கள் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். கஜானாவை காலி செய்து விட்டு சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட  திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் மதக...
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், திருமுருகன...