செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25
Shadow

தமிழக அரசியல்

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

HOME SLIDER, kodanki darbar, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன...
தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்கிற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் 'வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தாம்பூல தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார். மண்டல அலுவலகத்தின் வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் ச...
கோபால் தலைக்கு விலை வைத்த வீரப்பன்? கூட்டாளியின் பகீர்அனுபவம் I Untold Stories of Veerappan | Part 5

கோபால் தலைக்கு விலை வைத்த வீரப்பன்? கூட்டாளியின் பகீர்அனுபவம் I Untold Stories of Veerappan | Part 5

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், வீடியோ
    கோபால் தலைக்கு விலை வைத்த வீரப்பன்? கூட்டாளியின் பகீர்அனுபவம் I Untold Stories of Veerappan | Part 5   https://youtu.be/r_JE1to0RnQ
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி! அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது. நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும். மேலும் வார்டுகளை பொறுத்தவரை தொகுதிக்கு ஒன்று வீதம் 21 வார்டுகள் தரவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் அதை ஏற்கவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அ.தி.மு. க.வினர் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிரடியாக வெளியிட்டனர். ...
“காவல்துறையில் கோட்சே வாரிசுகள்” திருமாவளவன் அறிக்கை

“காவல்துறையில் கோட்சே வாரிசுகள்” திருமாவளவன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  காந்தி நினைவுநாளில் கோவையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது அங்கு வந்த காவல்துறையினர் அதனைத் தடுத்துள்ளனர் என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது அதிகார வரம்புமீறல் என்றும், காவல்துறையில் கோட்சே வாரிசுகள் என்றும் குறிப்பிட்டு, இது குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவு நாளையொட்டி கோவையில் 'மக்கள் ஒற்றுமை மேடை' என்னும்அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தியைக் கொன்றத...
முகில் சொல்வதெல்லாம் பொய் அவர் ஒரு போலீஸ் உளவாளி I வீரப்பன் கூட்டாளி சிவா பகீர் – Part 3

முகில் சொல்வதெல்லாம் பொய் அவர் ஒரு போலீஸ் உளவாளி I வீரப்பன் கூட்டாளி சிவா பகீர் – Part 3

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
    முகில் சொல்வதெல்லாம் பொய் அவர் ஒரு போலீஸ் உளவாளி I வீரப்பன் கூட்டாளி சிவா பகீர் - Part 3   https://youtu.be/5Upn2MPRrR4
TTV தினகரன், சசிகலாவை கடத்த திட்டமிட்ட வீரப்பன்! கூட்டாளி பகீர் தகவல் I Veerappan Mega Plan -part 2

TTV தினகரன், சசிகலாவை கடத்த திட்டமிட்ட வீரப்பன்! கூட்டாளி பகீர் தகவல் I Veerappan Mega Plan -part 2

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், வீடியோ
    TTV தினகரன், சசிகலாவை கடத்த திட்டமிட்ட வீரப்பன்! கூட்டாளி பகீர் தகவல் I Veerappan Mega Plan -part 2   https://youtu.be/UKfk2wLi9fo
”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
    அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார். தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய், அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார். அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது. இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ, விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர். இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும்.   அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியதாக ச...
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபொழுது, அங்கு ‘வாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்க’ என்ற பாடல் பாடப்பட்டது. மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தியிருந்தார். இதற்காக நிகழ்விடத்திற்கு அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடலைப் பாடினர் முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   &nb...
உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மிக நீண்ட பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரசுக்கும், பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நேரங்களில் தண்ணீர் காட்டி வருகின்றன. இதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் விழிபிதுங்கி தவிக்கின்றன. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அப்படி என்றால் இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் படாதபாடு படுகின்றன. 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது. அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுத...