நிவின் பாலி படத்துக்கு கதாசிரியராக மாறிய தயாரிப்பாளர்..!
பிரபல தயாரிப்பு நிறுவனம் 24am ஸ்டுடியோஸ், தங்களது மூன்றாவது படத்தை துவங்கியுள்ளனர். இப்படத்தை, பிரபல இயக்குனர்களான ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவனுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. இப்படத்தின் சிறப்பம்சம், இந்தியா சினிமாவே போற்றி கொண்டாடும் PC ஸ்ரீராம் அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதாகும். '24am ஸ்டுடியோஸ்' RD ராஜா பேசுகையில், ''தேர்ந்த, பெரும் வெற்றிகளை பெற்ற இயக்குனர்களுடன் பிரபு ராதாகிருஷ்ணனை ஒப்பிடலாம். அவரது திறமையும்,சினிமா மீது இருக்கும் காதலும், வெற்றிக்காக வெறித்தனமாக உழைப்பதிலும் அவரது வெற்றி நிச்சயிக்க படுகிறது. இவரை போன்ற திறமைசாலிகளை அறிமுகப் படுத்துவதில் 24am ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. சினிமாவின் வளர்ச்சிக்கு திறமையான இயக்குனர்களு...









