இசைஞானி இளையராஜாவின் 'உலகம்மை' பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார்
தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, 'உலகம்மை' திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார்.
'சாதி சனம்', 'காதல் எஃப்எம்' மற்றும் 'குச்சி ஐஸ்' புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான 'ஒரு கோட்டுக்கு வெளியே'-வை அடிப்படையாகக் கொண்ட 'உலகம்மை' திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. '96' புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள 'உலகம்மை' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமை...
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர்.
ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
கார்கிவ் ரெயில் நிலையத்தில் உள்ள நிலவரம், தங்களின் நிலை குறித்து இந்திய மாணவர்கள் வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.
கடும் சிரமங்களை சந்தித்து ரெயில் நிலையத்திற்கு வந்தால் அங்கிருந்து ரெயிலில் ஏற உக்ரைன் போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், கேட்டால் தங்களை அடித்து உதைப்பதாகவும் கண்ணீர்மல்க கூறுகின்றனர் மாணவர்கள்.
உக்ரைனில் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு ஒரு மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரெயி...
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த ஆல்பம் சாங் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருவதால், பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங் உருவாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.
பெரும்பாலான ஆல்பம் பாடல்கள் காதல், நடனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜடா படம் மூலம் இயக்குனராக பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் குமரன், ‘பறை’ என்னும் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார். இந்த பறை வழக்கமான ஆல்பம் பாடல்களை தாண்டி, உண்மை கதையை சமுதாயத்தில் பலரும் கவனிக்கப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன்....
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ்.
ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.
தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் ‘வா மணவாளா..’ என்ற ஆல்பம் சாங் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், ஆரவ் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
இதற்காக 6 ஆறுமாத காலமாக கடின உழைப்பையும், அர்ப்பணிப்பும் செய்திருக்கிறார்.
ஆரவ் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார்.
மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்....
கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான
மணி ரத்னம் இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”
2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.
இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்கு...
சூர்யாவுக்கு 'நடிப்பு நாயகன்' பட்டம் வழங்கிய கதாநாயகி
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருட...
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.
நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமானது.
அதன்பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளத...