வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ!

பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிகினி உடையில் வலம் வரும் கிரண்... வைரலாகும் வீடியோ! ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வின்னர் படம் நியாபகம் வருகிறது என்றும், வயதானாலும் இளமை குறையவில்லை என்றும் பதிவு செய்து வருகிறார்கள்....
கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கையில் பேனாவுடன் தனுஷ்... ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்! நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மாறன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் தனுஷ் கையில் பேனாவுடன் நிற்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!

மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்! ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தற்போது இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், மாநாடு திரைப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கா...
ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்!

ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்! சிதம்பரத்தில், மாதாந்திர ஊக்கத்தொகை வேண்டி அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 பயிற்சி மருத்துவர்கள் இன்று திடீர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதுபற்றி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது:- கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரி...
சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள்
    சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.   தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்," என்றார்.   "உலகத்தரம...
அமெரிக்காவில் பிரிந்த ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி!

அமெரிக்காவில் பிரிந்த ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். இதுபற்றி டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ஜேசன்மோமோவா கூறும்போது, “எனக்கு 8 வயதாக இருந்தபோது நான். அவளை டி.வி.யில் பார்த்தபோதே, அம்மா எனக்கு அவள் வேண்டும் என்று கூறினேன். விரும்பினேன். என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் (லிசா போனட்) பின்தொடர்ந்து உன்னை நான் அடைவேன்” என்று நெகிழ்ந்தார். இருவரும் உருகி உருகி காதலித்தனர். லிசா 2007-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அடுத்த ஆண்டில் ஒரு ஆண்குழந்தையையும் பெற்றார்.அதன்பின்னர் 2017-ம் ஆண்டுதான், 2 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 5 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த காதல் திருமண வ...
துபாயிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த ஷாக் தகவல்!

துபாயிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த ஷாக் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  துபாய் விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. துபாயில் கடந்த ஜனவரி 9-ம் தேதி இரவு, 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கு ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு அறிவித்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தின் இ.கே-524 என்ற விமானம் இரவு 9.45 மணிக்கு ஐதராபாத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமான இ.கே-568, 5 நிமிட இடைவெளியில் பெங்களுருக்கு புறப்பட இருந்தது. துபாய் - ஹைதராபாத் வ...
ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ஆன “போடா டேய்”  தமிழ் ட்வீட்!

ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ஆன “போடா டேய்” தமிழ் ட்வீட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ஆன “போடா டேய்” தமிழ் ட்வீட்! இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் மஹேந்திரா. இவரது சொத்து மதிப்பு 190 டாலர் என்று மதிப்பிடடப்பட்டுள்ளது. ஆனந்த் மஹேந்திரா வெற்றிகரமான தொழிலதிபராக இருப்பது போலவே சமூக வலைதளத்திலும் பலரது பாராட்டுகளை பெற்று வருபவர். ட்விட்டரில் அவரது பதிவுகளுக்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. சமூக சிந்தனை, தொழில் சார்ந்த அறிவிப்புகள் மட்டுமில்லாமல் சுவாரஸ்ய நிகழ்வுகள், நகைச்சுவை சம்பவங்கள் ஆகியவற்றையும் இவர் பதிவிட்டு வருகிறார். இதனிடையே பொங்கல் அன்று இவர் தமிழ் மொழி பற்றியும் தமிழ்நாட்டில் இவர் கல்வி பயின்றது குறித்தும் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் ஒரு ஆற்றல் மிகுந்த மொழி. உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தை கேட்டு புரிந்துகொள்ள எனக்கு நேரம் இல்லை எ...
சீறிப்பாய காளைகள்… பரிசாக கார்,பைக்,தங்ககாசு ரெடி இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

சீறிப்பாய காளைகள்… பரிசாக கார்,பைக்,தங்ககாசு ரெடி இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

HOME SLIDER, NEWS, செய்திகள்
அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேட்டில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ்பெற்றது. அங்குள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேடு கிராம பொதுமக்கள் மற்றும் மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனமும் அளிக்கப்பட உள்ளது. சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு நாட்டுப்பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிகட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு...
விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க

விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க பட விழா மேடையில் வேண்டுகோள் வைத்த நடிகர்   https://www.youtube.com/watch?v=0vFbNf21zYs&t=3s