வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்!

மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்! முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கொரோனா நடைமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா?

சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வடமலைபாளையம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையம், ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கும்படி, பவானி டி.எஸ்.பி.க்கும், காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின...
நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அம்பேத்கர் விருது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்துவருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 2021...
தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய தெருக்குரல் அறிவு!

தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய தெருக்குரல் அறிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய தெருக்குரல் அறிவு! நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தி கேஸ்ட்லெஸ் கலக்டிவ் பேண்டில் அறிமுகமாகி, வாத்தி ரைடு, நீயே ஒலி, வாய்ஸ் ஆப் யுனிட்டி, போன்ற பல பாடல்களை எழுதி பாடிய அறிவு இந்த பாடலை பாடியுள்ளார். இதனை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார். அதில், மாறன் படத்தின் ஓப்பனிங் பாடல...
வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ!

வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ! திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருக்கும் பிருந்தா மாஸ்டர். துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்குகிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது. இன்று நடிகர் துல்கர் சல்மான் அந்த படத்தில் அவர் பாடிய அச்சமில்லை பாடலின் சிறிய தொகுப்பை வெளியிட்டு அனைவரின் பாரட்டுகளையும் பெற்று வருகிறார். நாளை(ஜனவரி 14) வெளிவரவிருக்கும் இப்பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழில் முதல் முறையாக பாடியிருக்கும் துல்கர் சல்மான், துள்ளி ...
நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு!

நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு! பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். அதில் அவர் இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பெண் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லை. சித்தார்த் மீதுந டவடிக்கை எடுக்ககோரி மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜதராபாத் சைபர் கிரைம் போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதன் பேரில் சித்தார்த் மீது 509 வது பிரிவின் கீழ் பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது, எழுதுவது போன்ற வழக்கு...
நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்! நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் 33வது படமான இதை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் இசை வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கப்போகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி! மலையாள சினிமாவில் பல படங்கள் நடித்து பிறகு தமிழில் 2018-இல் வெளிவந்த களரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இவர் தமிழில் சில படங்களே நடித்தாலும் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து, இப்படத்தில் இருந்து சம்யுக்தா மேனன் விலகியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது. சிலர் இது வதந்தியே என்று பதிவிட்டு வந்திருந்தனர். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் இது வதந்தியே என்று உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவிட்டிருக்கிறார். சேலையில் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'வாத்தி/ சார் என்னுடைய முதல்நாள்' என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் இவர் வாத்தி படத்தில் இருந்து விலக...
வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
*வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்* வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள்...
கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் – கிருத்திகா உதயநிதி பேச்சு

கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் – கிருத்திகா உதயநிதி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் - கிருத்திகா உதயநிதி பேச்சு   https://www.youtube.com/watch?v=AjU0vqUjGF4