வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு!

அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு! சென்னை கலெக்டர் விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ந் தேதி (நாளை) காந்தி ஜெயந்தியையொட்டியும், 19-ந் தேதி மிலாதுநபி தினத்தன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும்,  டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94...
பிகினி உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்!

பிகினி உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிகினி உடையில் பூனம் பஜ்வா - வைரலாகும் புகைப்படங்கள்! ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது....
ரஜினி படத்தில் நடித்த ஷெரின்!

ரஜினி படத்தில் நடித்த ஷெரின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினி படத்தில் நடித்த ஷெரின்! செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட்லுக் போஸ்டர், பாடல்கள், டீச...
விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்!

விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்! நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ...
ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு!

ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு! இந்திய விமானப்படையின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு முதல் விமானப்படையின் பல்வேறு நிலைகளில் பதவி வகித்தவர் விவேக் ராம் சவுத்ரி. 2019-ம் ஆண்டில் இருந்து ஷில்லாங்கில் உள்ள கிழக்கு கமாண்டிங் படைப்பிரிவில் சீனியர் ஏர் ஸ்டாப் ஆபீசராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, வி.ஆர்.சவுத்ரி விமானப் படைப்பிரிவு தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி இன்று மாலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்....
சமந்தா- நாக சைத்தன்யா  திருமண செலவு!  இத்தனை கோடியா?

சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா? பல்லாவரத்து பொண்ணு என தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கி பின் சின்ன சின்ன படங்கள் நடித்து இப்போது முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக ஹிட் படங்கள் கொடுத்த இவர் விரைவில் ஹிந்தியில் படம் நடிப்பார் எனப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கூட அண்மையில் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புவதாகவும், பேமிலி மேன் 2 படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என வைரலாக செய்திகள் பரவி வருகின்றன. சமந்தா-நாக சைத்தன்யாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக கோவாவில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள நடந்தது. அக்டோபர் 6, 2017ம் ஆண்ட...
இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது!

இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது! குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகிறது. நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, மைலாடி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 27.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 3 வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறையாற்றில் தொடர்ந்து வெள்ளம் ப...
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்...
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்! உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை. நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம். உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும். இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும். கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள். முதுகெலும்பை நேராக வைத்திருங்கள். தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும். தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது. குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள். நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள். கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்கல...