வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்!

வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்! டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்த பருவமழை சீசனில் சாதனை அளவாக இதுவரை 1005.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பருவமழை காலத்தில் பெய்த மழை அளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து டெல்லியில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலைய வளாகம் வெள்ளக்காடாக மாறியது. விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மோசமான வானிலை காரணமாக  விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது....
விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்!

விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விளம்பரம் தேட வில்லை.... கனகா காட்டம்! கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான கனகா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோரின் படங்களில் நடித்து இருக்கிறார். 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் நடிக்க ஆசை உள்ளது என்றும், இதற்காக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கற்கப்போகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வீடியோவை பார்த்த சிலர் மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று கனகாவை விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்து கனகா வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், “நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. ...
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார். நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், எனவே இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது....
மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… பட்டாசு வெடிக்க தயாராகும் ரசிகர்கள்!

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… பட்டாசு வெடிக்க தயாராகும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... பட்டாசு வெடிக்க தயாராகும் ரசிகர்கள்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா!

திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா! கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா - சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா. கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார். இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை திட்டம் 12,959 கோவில்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- த...
சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் – பத்திரிகையாளர் சங்க விழாவில் ஜெய் கல கல பேச்சு!

சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் – பத்திரிகையாளர் சங்க விழாவில் ஜெய் கல கல பேச்சு!

CINI NEWS, HOME SLIDER
    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந் நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் பேச்சு... சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் - ஜெய்.. விஜய் சார் கிட்ட 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன் - ஜெய் இதில் நடிகர் ஜெய் பேசும்போது பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார். திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செ...
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் - ராம்சரண் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இன்று நடைபெற்ற பூஜையில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங், பிரபல இயக்குனர்கள் ராஜமவுலி, லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. முதலில் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்! கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், பிரிட்டனின் டேன் இவான்சும் மோதினார்கள். தொடக்கம் முதலே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை 6-3 என மெட்வதேவ் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-4, மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார். இறுதியில், மெட்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்....
3வது டி20 போட்டி – வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து!

3வது டி20 போட்டி – வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
3வது டி20 போட்டி - வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து! நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், வங்காளதேசம்  19.4 ஓவரில் 76 ரன்க...