நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்
இந்திய உணவு கழகம் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர், இந்திய உணவு கழக செயல் இயக்குனர் (தெற்கு) ஆர்.டி.நஜீம், தமிழக பொதுமேலாளர்கள் எச்.எஸ்.தலில்வால், ஷைனி வில்சன், மாநில உணவுத்துறை ஆணையர் மதுமதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, மத்திய கிடங்கு துறையின் மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 886 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்கிறது. வரும் ஜூன் மாதம் வரை இந்த மையங்கள் செயல்படும். நடப்பாண்டு கரீப...









