“‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”
CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
“‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”
முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்
இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் ப...









