புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் அடித்திருக்கும் கமெண்ட் இதுதான்
டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன்.
திருமண வாழ்த்துக்கள்...
“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.
'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில்,
'' இப்படத்தின் கதாநாயகன் சிவ...
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார்.
சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு
உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போ...
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன்.
பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியதாக கூறினார்.
நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல.
சிறைவாழ்க்கையின்போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் சுப்ரீம கோர்ட...
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும்.
9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்...
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் துணிச்சலுடன் எடுத்து வைக்க தயங்காதவர். இவர் எழுதிய பல கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் தான் திரைப்படத்துறையிலிருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
தனக்காக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இனியும் இப்படி தொடர்ந்தால் திரை உலகில் இருந்து விலகி தொழில் செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்....
நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மே மாதம் 20-ந்தேதி அன்று வெளியாக உள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....