ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ
????மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ உரையாற்றினார்.
வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார்.
வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர். வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில...









