சமுத்திரக்கனி நடிப்பில் கோலி சோடா 2
இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை. 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய திறன் கொண்ட கதையாகும். இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும் சாத்தியமும் நிறைந்து இருந்தது. அது போலவே சமீபத்தில் 'கோலி சோடா 2' படத்தின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அறிவித்த நாளிலிருந்தே படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்துவருகிறது . இக்கதை நான்கு முதன்மை கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார். இப்பொழுது அந்த நான்கு கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , ''இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். கோலி...









