பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்
நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர்.
மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவ...









