வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 49.1 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. எந்த வேட்பாளரையும் ஆதரிக்காத 5.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். இது ஆளும் பாஜகவை கடும் அதிர்ச்சியாக்கி உள்ளது.   குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 14724427. அடுத்து காங்கிரஸ் கட்சி 41.4 சதவீதம...
மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அந்நாள் பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், பிறந்த மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அதே தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2012-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த நஷ்டக் கணக்கை தற்போதையை வெற்றியின் மூலம் லாபக் கணக்காக ஆஷா பட்டேல் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!

தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கவுள்ளது. 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. 'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது. இதனை தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தெலுங்கில் முன்னணி நடிகரை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்....
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட தியா மிர்சா “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம்  நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkin...
‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள்
வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ள 'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.   https://youtu.be/fRbIqg5Kz7Q
நாப்கின்  பிரச்னைகளை பேசும் பேட் மேன்

நாப்கின் பிரச்னைகளை பேசும் பேட் மேன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் பால்கி இயக்கியுள்ள திரைப்படம் 'PADMAN'. சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நாப்கினின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் வரும் குடியரசுத் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்தின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். https://youtu.be/-K9ujx8vO_A...
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!  100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..! தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம். இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்... வெட்டு குத்து கலாட்டாக்கள்... கள்ள ஓட்டு புகார்... தேவையற்ற அலைச்சல்கள்... எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது. தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில...
சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘களவாடிய பொழுதுகள்’. நீண்ட கால காத்திருப்புக்கு பின் இந்த படம் வெளியாகிறது. https://youtu.be/miqHVx0edtI படம் பற்றி கூறிய பிரபுதேவா... “என் வாழ்நாளில் இது வரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் நடித்திருக்கிறார்கள். இசை - பரத்வாஜ், பாடல்கள் - வைரமுத்து, அறிவுமதி, கலை - கதிர், படத்தொகுப்பு - பி.லெனின், பிரேம், தயாரிப்பு - கருணாகரன், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் - தங்கர் பச்சான். படம் பற்றி கூறிய அவர்.. “ இது காதலிக்க போகிறவர்களுக்கு ஒர...
அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார...