வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

தமிழ் இருக்கை அமைய ரூ.1 லட்சம் வழங்கினார் நடிகர் கருணாஸ் MLA..!

தமிழ் இருக்கை அமைய ரூ.1 லட்சம் வழங்கினார் நடிகர் கருணாஸ் MLA..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ். புவிப்பந்தில் ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குவதோடு மட்டுமன்றி முதன்மையும் பெறுகிறது. ஆகவே, உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களை ஈர்க்க முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக உள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் பற்றாக்...
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய விஷால் ரூ. 10 லட்சம் நன்கொடை..!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய விஷால் ரூ. 10 லட்சம் நன்கொடை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சமீபத்தில் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்கியது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தனது சொந்தப் பணத்தில் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம...
நவ.24ல் ரிலீஸ் ஆகும் சென்னை 2 சிங்கப்பூர்..!

நவ.24ல் ரிலீஸ் ஆகும் சென்னை 2 சிங்கப்பூர்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிலிருந்தே 'சென்னை 2 சிங்கப்பூர்' படம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. ஜிப்ரானின் இசை இப்படத்தின் தூணாக இருக்கும் என கருதப்படுகிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு கூறியுள்ளது. புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட தினத்திலிருந்து சினிமா ரசிகர்களிடையே இந்த ட்ரைலர் அசத்தலான வரவேற்பை பெற்றுவருகிறது. மிக சுவாரஸ்யமாக, வித்யாசமாக இருக்கும் இந்த ட்ரைலரை ரசிகர்கள் மட்டுமின்றி வணிக தரப்பினரும் ரசித்து பாராட்டியுள்ளனர். ''இந்த ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களது உழைப்பிற்கு கிடைத்துள்ள சன்மானமாகும். நான் எதிர்பா...
நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உடல் நிலை, சிகிச்சை காரணமாக கடந்த கடந்த ஓராண்டாக   கருணாநிதி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த வீடியோ திமுக சார்பில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோவும் திமுக சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 1 ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுபேரன் மனுரஞ்சித்தின் திருமண விழா நடக்க போகுது. அதாவது கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் போன ஜூலை 10 ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ம் தேதி நடக்கும் இவர்...
களத்தில் இறங்கிய கமல்ஹாசன் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்..!

களத்தில் இறங்கிய கமல்ஹாசன் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ட்விட்டரில் மட்டுமே கருத்து சொல்லும் கமல் வெளியே வந்து பார்ப்பாரா என அரசியல் கட்சியினர் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாள் அன்று முக்கியமான அறிவிப்பு வெளியிடப் போவதாக கமல் ஹாசன் அறிவித்தார். இந்த சூழலில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் கமல் களத்தில் இறங்கி பார்வையிட்டார். இது அரசியல் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கமல்ஹாசன் களத்தில் இறங்கியது அரசியலுக்கான முன்னோட்டம். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார். கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல்கழிவுகளை கொட்டுவதாக கமல் புகார். சென்னை எண்ணூர் பகுதி மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குற...
அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை  வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை ஆய்வு மையம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று வீசி வருவதாகத் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது படிப்படியாக வலுப்பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் கூறினார். தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்த அவர், சென்னையில் விட்டு விட்டு ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்...
மெர்சல் விவகாரம் விஜய்க்கு  ஆதரவாக “அறம்” பட இயக்குனர் கோபி அறிக்கை

மெர்சல் விவகாரம் விஜய்க்கு ஆதரவாக “அறம்” பட இயக்குனர் கோபி அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  மெர்சல் பட விவகாரங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள் நேரத்தில் விஜய் ஜோசப் விஜய் என பி ஜே.பி கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் விஜய் வெளியிட்ட நன்றி அறிவிப்பில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார். விஜய்க்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் அறிக்கை வெளியிட்டனர். நயன்தாரா நடிப்பில் அறம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கோபி விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், எனக்கு எந்த பெயர் வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் எந்தப் பெயரோடு நான் வெளிப்பட வேண்டும் என்பது எனது உரிமை . என் பெயருக்குப் பின்னால் இன்னொரு அடையாளம் இருப்பதாக ஒரு மதவாதி அடையாளப் படுத்தினால் என் அடிப்படை உரிமையை படுகொலை செய்யும் ஆள்காட்டி வேலையை செய்கிறது என்பது பொருள் விஜய் கிறித்துவராகோ , இஸ்லாமியராகவோ புத்திஸ்ட்டாகவோ சீக்கியராகவோ இருப்பது நடிகர் விஜய்யின் உரிமை இதனால் தான் ம...
அழியும் காடுகளைப் பற்றி பேசும் மரகதக்காடு..!

அழியும் காடுகளைப் பற்றி பேசும் மரகதக்காடு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது   இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.   அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன்   மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, " அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும்  அநீதி ப...