என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’- அறிமுக நாயகன் வசந்த் ரவி
எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள 'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும். இது குறித்து அவர் பேசுகையில், '' என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் 'தரமணி'. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். 'தரமணி' படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் , எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு ப...









