விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா*
*விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் 'ஹாட் ஸ்பாட் 2 மச் 'படத்தின் வெற்றி விழா*
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட் ஸ்பாட் 2 ' மச் ' திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், '' அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழ...









