‘மிடில் கிளாஸ்’ விமர்சனம் 3.5/5
‘மிடில் கிளாஸ்’ விமர்சனம்
நடுத்தரக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் பற்றாக்குறையே மிக முக்கியமான காரணமாக இருக்கும். பணம் இருந்தால் நடுத்தரக் குடும்பத்தின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடலாம்.
அப்படிப்பட்ட நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் முனீஷ்காந்த் - விஜயலட்சுமி தம்பதிக்கு, தங்களது பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தனது அஜாரக்கிரதையால் முனீஷ்காந்த், அந்த வாய்ப்பை இழந்து விடுகிறார்.
இதனால், குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இழந்த வாய்ப்பை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் அதில் வெற்றி பெற்றாரா?, இல்லையா? என்பதை, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையாகவும், சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சொல்வது தான் ‘மிடில் கிளாஸ்’.
காமெடி மற்றும் குணச்சித்திர வேட...









