விஜய் சேதுபதி வரிகளில் ‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் புதிய இசைப் படைப்பு ‘இருவர்’
‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ – விஜய் சேதுபதி வரிகளில் நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் வெளியாகும் புதிய இசைப் படைப்பு!
ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘இருவர்’ இசைப் படைப்பின் ஆடியோ மற்றும் லிரிக்கல் வீடியோ நவம்பர் 4-ம் தேதி சரிகமா ஒரிஜினல்ஸ் (Saregama Originals) வெளியீடாக வெளியாகிறது!
இசை என்பது மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழிகளில் ஒன்று. காதல், நட்பு, உறவுகள் என வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல உணர்வுகளை ஒரு இனிமையான இசை எளிதில் கடத்திவிடும். அத்தகைய காதல் மற்றும் மனித உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய இசைப் படைப்பு ‘இருவர்’.
‘ஜடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் குமரன், இந்த இசைப் படைப்பை உருவாக்கி இயக்கியுள்ளார். ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப...









