பிரசவத்தில் உள்ள மெடிக்கல் மாஃபியாவை தொட்டு சர்ச்சையை ஏற்படுத்துமா “பர்த் மார்க்”
‘நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. (Birth Mark) ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் இணைந்து இப்படத்தை எழுதியிருப்பதோடு, சேபியன்ஸ் (SAPIENS) எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்கள். விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில், நாயகனாக ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் கூறுகையில், “இது தான் எங்களுடைய முதல் படம். புதிதாக செய்ய ...









