புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

HOME SLIDER

பிரசவத்தில் உள்ள மெடிக்கல் மாஃபியாவை தொட்டு சர்ச்சையை ஏற்படுத்துமா “பர்த் மார்க்”

பிரசவத்தில் உள்ள மெடிக்கல் மாஃபியாவை தொட்டு சர்ச்சையை ஏற்படுத்துமா “பர்த் மார்க்”

CINI NEWS, HOME SLIDER
  ‘நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. (Birth Mark) ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் இணைந்து இப்படத்தை எழுதியிருப்பதோடு, சேபியன்ஸ் (SAPIENS) எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்கள். விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், நாயகனாக ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் கூறுகையில், “இது தான் எங்களுடைய முதல் படம். புதிதாக செய்ய ...
நடிகர் மம்முட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம் பிப்ரவரி 15ல் ரிலீஸ்

நடிகர் மம்முட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம் பிப்ரவரி 15ல் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகர் மம்முட்டியின் 'பிரமயுகம்' திரைப்படம் பிப்ரவரி 15 அன்று மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது...விரைவில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது!* கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் 'பிரமயுகம்' திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த 'பிரமயுகம்' படத்தை, 'பூதகாலம்' புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வே...
‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
    ‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், எந்தவித புகார்களும் இல்லாமல், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக, ரசிகர்களின் பேரதாரவுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன். முதன் முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இச...
ப்ளீஸ் பாக்காதீங்க… லவ்வர் கோடங்கி விமர்சனம் 2.5/5

ப்ளீஸ் பாக்காதீங்க… லவ்வர் கோடங்கி விமர்சனம் 2.5/5

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      நாயகன் மணிகண்டனும், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியாவும் கல்லூரியில் இருந்தே காதலித்து வருகிறார்கள். ஸ்ரீகெளரி வேலைக்கு போகிறார். மணிகண்டன் கடை வைக்கும் முயற்சியில் இறங்கி அதில் சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, எதற்கெடுத்தாலும் காதலி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார். ஒரு சூழ்நிலையில் மணிகண்டனை விட்டு பிரிய முடிவு எடுத்து பிரேக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா. அதை மணிகண்டனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மீண்டும் மீண்டும் ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஏற்க மறுத்தால் சாகப்போவதாக மிரட்டுகிறார். மணிகண்டனின் தொல்லையை தாங்க முடியாத ஸ்ரீ கெளரி ப்ரியா என்ன முடிவு எடுத்தார்? மணிகண்டன் என்ன ஆனார் என்பது தான் ‘லவ்வர்’ படத்தின் மீதிக்கதை. மணிகண்டன் கதாபாத்திரம் சதா சிகரெட்,...
அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’

அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாகிறது யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், கௌஷிக், அனித்ரா நாயர்,சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், பிரபஞ்சன், ஜெயக்குமார் ரயில் ரவி ,மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்....
“மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

“மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்‌ஷன் டிராமா “மெட்ராஸ்காரன்” திரைப்படம் !! SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், புதுமையான ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது. இந்நிகழ்வினில்… இயக்குநர் வஸந்த் சாய் பேசியதாவது.. மிக மிகச் சந்தோஷமாக உள்ளது. எனது உதவி இயக்குநர் வாலி மோகன் தாஸ் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வது மகிழ்ச்சி. ஷேன் நிகாம் ரசிகன் நான், அவரது மலையாளப்படங்க...
வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர்  K விஜய் பாண்டி பேசியதாவது.. எங்களின் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். என் முதல் படம் தேஜாவு அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள். அதே போல் இந்த படத்திற்கும் நல்ல  ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் சதீஷ் பேசியதாவது… என் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக...
இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்

இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்* *பதினைந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மிகச்சிறந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்” - சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்* *இந்த ஆண்டின் மிகச்சிறந்த சம்பவமாக “பைரி” திரைப்படம் இருக்கும்” – யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரன்* *பைரி வெறும் புறா சண்டை இல்லை; மனிதர்களின் உணர்வுகளைப் பேசுகிறது.” – யாத்திசை இயக்குநர்* *பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது* டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழ...
மூன்றாவது “வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங்” சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த நிவேதா!

மூன்றாவது “வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங்” சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த நிவேதா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார்!* விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை விளையாட்டு வீரர்கள் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது புதிய சாதனைப் படைத்துள்ளார். புதுதில்லி ஜே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024, பிப்ரவரி 7 முதல் 11 2024 வரை நடைபெற்றது. இதில் நிவேதா 2 தங்கப்பதக்கங்களை வென்றார். இதுமட்டுமல்லாது, பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நிவேதா. இதற்குமுன்பு, துருக்கியில் நடைபெற்ற ஏழாவத...
ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து அட்லியின் “ஜவான்” பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து அட்லியின் “ஜவான்” பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.* இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படத்தை, கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஜவான் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவென்பது, குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆஃப் எ ஃபா...