வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க, சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பா...
புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்! அடுத்தடுத்த வழக்குகளில் கைது!!

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்! அடுத்தடுத்த வழக்குகளில் கைது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கயிலுள்ள அவரது வீட்டில் காவல் கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மாதாவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவானது ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் இன்ற...
சிரஞ்சீவியுடன் இணையும் பிரபல இயக்குனர்!

சிரஞ்சீவியுடன் இணையும் பிரபல இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் ...
மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இப்படத்தில் விக்ரம் வில்லன் கதாப்பாத்திரத்தில் பேசப்பட்டது.   இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து இந்த தகவல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் “மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் ...
என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நாளை (24.02.2022) வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததை குறித்து நடிகை ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான ஒரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர...
பிக்பாஸில் கமலுக்கு பதில் இவரா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸில் கமலுக்கு பதில் இவரா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேரடியாக ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகிறது, இதனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என அவர் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. விக்ரம் திர...
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 2019 ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் தலைமையிலும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலும் இரு அணிகள் நேர் எதிராக தேர்தலை சந்தித்தது. முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தியதால், தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.   இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார், அதுவரை அரசு நியமித்த தனி அதிகாரி சங்கத்தை நிர்வகிப்பார் என உத...
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!* Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் *தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…* எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புர...
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை (24-ந் தேதி) நடக்கிறது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதே திறமையை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார...
15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!

15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அவருடைய சினிமா பயணம் தொடங்கி 15 வருடம் ஆகியிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். இவருடன் இணைந்து பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருடைய சினிமா பயணத்தில் இவருக்கு பருத்திவீரன் முக்கியமாக திரைப்படமாக அமைந்தது. பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.   அதன்பின் அவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இன்று (23-02-2022) கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கார்த்தி அவருடைய சமூக வலைத...