வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி

அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றினார். ஆர்.ஜே.பாலாஜி ஏன் இப்படி செய்கிறார்? உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக...
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காக்கி சட்டை அணியும் பிரபுதேவா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி ...
மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். ‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது. ‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒரு பெண்ணை கற்பழித்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பிரதமர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் இல்லையெனில் நாடு திக்கற்று போகும்’ என ராகுல் காந்தி தெரிவித்தார். மேல...
சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு

சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இதையடுத்து, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டி உள்ளது. இந்த கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. இந்நிலையில், சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது ஐந்து நாள் கடல் சோதனை ஓட்டத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்ட...
25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டுச் செல்லும். இதேபோல், குறிப்பிட்ட இடத்தையும் சரியான நேரத்தில் சென்றடைவது வழக்கம். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், சுமார் 25 வினாடிகள் முன்னதாக 7 மணி 11 நிமிடம் 35 வினாடிக்கு புறப்பட்டு கிளம்பி சென்றது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரெயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். பள்ள...
டிரம்ப் கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி கைது

டிரம்ப் கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி கைது

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப் அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக சுட்டார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் மியாமி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி வைத்திருந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த ஆசாமி ஏன் சுட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு – முழு விபரங்கள்

எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு – முழு விபரங்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது எனவே, எடியூரப்பா பதவியேற்றதை தடுக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்த அன்றே இரவில், சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. நள்ளிரவில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, எடியூரப்பா கவர்னரிடம் அளித்த கடித்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்று தள்ளி வைத்தனர். இதனை அடுத்து, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், க...
விஷாலை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்

விஷாலை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நாயகிகளாக நடித்துள்ளனர். காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொ...
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகைகன் அவ்வப்போது தங்களுடைய நிர்வாண அல்லது அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்து வழக்கம். அந்த வகையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 18-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது – பிரகாஷ்ராஜ் வருத்தம்

அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது – பிரகாஷ்ராஜ் வருத்தம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்ததுடன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.   இந்த நிலையில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றது பற்றி தனது டுவிட்டரில் பிரகாஷ்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது. பாரதிய ஜனதா மோசமான அரசியல் செய்ய தொடங்கிவிட்டது. இனி எந்த மக்கள் பிரச்சினையில் சிக்குகிறார்கள் என்ற எந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்.எல்.ஏக்கள் எங்கே செல்கிறார்கள். எந்த சொகுசு விடுதியில் எந்த எம்.எல்.ஏ. இருக்கிறார் என்ற புகைப்படம் அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக தலைப்பு செய்திகள் வரப்போகிறது. சந்தோ‌ஷமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்....