துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்த விஜய் சேதுபதி ஏன் தெரியுமா?
துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்த விஜய் சேதுபதி ஏன் தெரியுமா?
துபாயில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற அரபு ராஜ்ஜியத்தின் 50ஆவது பொன்விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
துபாயில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அரபு ராஜ்ஜியத்தின் 50ஆவது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரபு ராஜ்ஜியத்தின் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி விருதுகள...









