வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்று வேஷம்- ஒளிப்பதிவாளர் ராம்ஜி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' மாதிரியான ஒரு படத்தில் நடித்ததில்லை. இதில் அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார் என ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறினார். 'வேலைக்காரன்' படம் குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறுகையில், "சென்னை வெள்ளத்தின் போது 'வேலைக்காரன்' படத்தின் ஒரு வரிக் கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னைக் கவர்ந்தது, இந்தப் படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். 'வேலைக்காரன்' வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்காலத் தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குநர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மாலை படப்படிப்பை முடித்து விட்டு, மறுநாள் காலை படப்பிடிப்புக்கு போகும்போது அவரின் உதவியாளர்கள் சோம்பிக்கள் ப...
லீக் ஆன சமந்தா படங்கள்… அதிர்ச்சியில் இயக்குனர்..!

லீக் ஆன சமந்தா படங்கள்… அதிர்ச்சியில் இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நாக சைதன்யாவை மணந்த சமந்தா திருமணம் முடிந்த சில நாட்களில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராம் சரணுடன் சமந்தா நடிக்கும் புதிய தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் பாவாடை, தாவணி அணிந்து ஏழைப்பெண் தோற்றத்தில் நடிக்கும் சமந்தா, மாடு மேய்ப்பது போலவும், வீட்டு வேலை செய்வது போலவும் சில முக்கிய ஸ்டில்கள் இணைய தளத்தில் வெளியானது. அதைக்கண்டு இயக்குனர் சுகுமார் அதிர்ச்சி அடைந்தார். படத்தின் கதையை வெளிப்படுத்தும் விதமாக யாரோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் அடைந்தார். பட நிறுவனம் சார்பில் சமந்தாவின் ஸ்டில்கள் வெளியிடாத நிலையில் திருட்டுத்தனமாக வெளியிடுவது யார் என்று பட குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஸ்டில்களை வெளியிடுவது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பட தரப்பினர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சில ஸ்டில்கள் ...
பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்கிறதா வெங்கட்பிரபுவின் பார்ட்டி..!

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்கிறதா வெங்கட்பிரபுவின் பார்ட்டி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில், சத்யராஜ், நாசர், ஜெய், சிவா, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி, கயல் சந்திரன், ஷாம், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த ‘பார்ட்டி’-யில் இணைந்துள்ளது.முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரேம்ஜி.   https://youtu.be/eD_kKt_JeBw இந்நிலையில் ‘பார்ட்டி’ படத்தின் டீசர்  வெளியானது இந்த டீசரில் இதில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடிபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பேசிய, மித்ரோன்... என்று தனது உரையை துவங்குவது போலவும், டீசரின் முடிவில் பணம் செல்லாது என்று அறிவிப்பது போலவும் அமைந்துள்ளது. இதன் மூலம் பணமதிப்பிழப்பை நடவடிக்கையை வெங்கட் பிரபு கலாய்க்க...
ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது நியூட்டன்..!

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது நியூட்டன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் நியூட்டன் திரைப்படம், முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் 4ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவுக்காக, இந்தியா சார்பில் நியூட்டன் என்ற இந்தி திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முதல் சுற்றிலேயே வெளியேறியதாக, ஆஸ்கர் தேர்வுக்குழு தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வகை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஆஷுதோஷ் கோவாரிகரின் 'லகான்' 2001ல் இடம்பெற்றது. ஆனால், இதுவரை எந்த இந்திய திரைப்படமும் ஆஸ்கார் விருதை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு

புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பெங்களூரில் புத்தாண்டு தினத்தன்று   மான்யதா டெக் பார்க்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று ஆபாச  நடனம் ஆட உள்ளார் என விளம்பரம் செய்யப்பட்டு  வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன்னி லியோனின் உருவ புகைப்படங்களை எரித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்....
உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் ஆறுதல்

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் ஆறுதல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியபாண்டியன் உடலுக்கு  முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: சோனியா காந்தி அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: சோனியா காந்தி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சோனியா தலைவராக உள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 17 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. வீட்டில் இருந்தபடியே கட்சி மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இந்த நிலையில் 2019-ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் சோனியாவிடம் நிர்ப்பந்தமான ஒன்றாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு...
பூஜையுடன் தொடங்கப்பட்ட  ‘ஈடிலி’

பூஜையுடன் தொடங்கப்பட்ட ‘ஈடிலி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’. லிம்மல் ஜி,  லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று - இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்....
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...