வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி – உறுதிப்படுத்திய புகைப்படம்!

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி – உறுதிப்படுத்திய புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. நடிகை ஷிவானி இயக்குனர் பொன்ராமுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிறந்த இயக்குனருடன் பணிபுரிவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் இது எந்த திரைப்படமாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை குறித்த அறிவிப்...
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ! இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பரோட்டா சூரியாக வலம் வந்தவர் நடிகர் சூரி. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. பின்னர் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி படத்திற்கு 'விடுதலை' என்று பெயரிடப்பட்டு சில புகைப்படங்களும் வெளியாகியது. இதனை தொடர்ந்து டான், விருமன், எதற்கும் துணிந்தவன், போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி. தற்போது இயக்குனர் அமீர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற பல வெற்றி படங்களை...
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்....
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது எப்.ஐ.ஆர், சேஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா வில்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ரைசா வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு 2-வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இரு...
”யார் மீதும் வருத்தம் இல்லை என் தோல்விகளுக்கு நான் எடுத்த முடிவுகளே காரணம்” தம்பிராமையா ஓப்பன் டாக்

”யார் மீதும் வருத்தம் இல்லை என் தோல்விகளுக்கு நான் எடுத்த முடிவுகளே காரணம்” தம்பிராமையா ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ”யார் மீதும் வருத்தம் இல்லை என் தோல்விகளுக்கு நான் எடுத்த முடிவுகளே காரணம்” தம்பிராமையா ஓப்பன் டாக்   https://www.youtube.com/watch?v=CqGWNuagF_Y
சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், நடிகர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என பதிவு செய்திருந்தார். சாய்னா நேவாலின் இந்த கருத்திற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் உங்கள் ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்க...
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

HOME SLIDER, NEWS, நடிகைகள்
  நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும். கொரோனா தொற்றிலிருந்த...
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

HOME SLIDER, NEWS, கட்டுரை
  நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாது. ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படும். மது வாங்க நிற்பவர்களில் 2 பேருக்கு இடையில் 6 அடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். கடைகளுக்கு முன் கூட்டமாக இருக்க கூடாது. கூட்டம் கூடினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ...